Loading...
 

விவாத பொதுநிலைகள்

 

விவாத தலைப்புகள்

ஒவ்வொரு விவாதமும் தெளிவாகக் கூறப்பட்ட, சின்ன விவாதக் கேள்வியைக் கொண்டிருக்கும், மேலும் ஒவ்வொரு அணியும் அந்த கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட, சந்தேகமில்லாத, தெளிவாக வரையறுக்கப்பட்ட பதிலை வாதம் செய்வார்கள். உதாரணமாக,  "உயர் கல்வி இலவசமாக இருக்க வேண்டுமா?" என்பது விவாத தலைப்பாக இருக்கலாம், இந்த விவாதத்தில் மூன்று அணிகள் பங்குபெறலாம், அவை ஒவ்வொன்றும் பின்வரும் மாதிரி பதில்களை வாதம் செய்யலாம்:

  • அணி வொய்: "ஆம், உயர் கல்வி எப்போதும் இலவசமாகவே இருக்க வேண்டும்."
  • அணி என்: "இல்லை, மக்கள் தங்கள் சொந்த கல்விக்கு முதலீடு செய்ய வேண்டும்."
  • அணி டி: "ஒரு குறிப்பிட்ட அளவிலான வருமானத்தின் கீழ் உள்ளவர்களுக்கு உயர் கல்வி இலவசமாக இருக்க வேண்டும்."

சிக்கலான விஷயங்களில் இரண்டுக்கும் கண்ணோட்டத்தை நாங்கள் வெளிப்படையாக ஊக்குவிக்கிறோம், எனவே "ஆம் என்பதற்கு ஒரு அணியும்", "இல்லை என்பதற்கு ஒரு அணி" என்று மட்டுமே இருப்பதைத் தவிர்க்க முயற்சிக்க பரிந்துரைக்கிறோம், ஏனெனில் அரிதாகவே நிஜ உலகப் பிரச்சினைகள் "ஆம்/இல்லை" என்ற எளிமையான பதிலைக் கொண்டிருக்கும்.

தலைப்புகள் நிஜ உலகத்துடன் தொடர்புடைய தலைப்புகளாக இருக்க வேண்டும், மேலும் அதனை எந்த உறுப்பினரும் கிளப்பில் கல்வித் துறையின் துணைத் தலைவரிடம் முன்மொழியலாம்.

விவாதங்களுக்குப் பொருந்தாத தலைப்புகள் (APDA, 2016):

  • முற்றிலும் அகநிலை தலைப்புகள், இதில் புறநிலை வாதங்களை முன்வைக்க முடியாது. எ.கா., எந்த மதம் "உண்மையானது"?
  • இறுக்கமான தலைப்புகள் (அடிப்படை நிலையின் வேறு பக்கத்தை வாதிடுவது மிகவும் கடினமான அல்லது சாத்தியமற்ற தலைப்புகள்). உதாரணமாக, எந்தவொரு நபரும் காரணமின்றி அரசால் சித்திரவதை செய்யப்படக் கூடாது.
  • சொல்மிகைமைகள் (ஒரு நிலை மட்டுமே தர்க்கரீதியாக இருக்கக்கூடிய தலைப்புகள்). உதாரணமாக: பூமி சூரியனை விட சிறியதா?
  • மிகவும் அறிவு சார்ந்த தலைப்புகள் (முறையான விவாதத்திற்கு நிறைய குறிப்பிட்ட அறிவு தேவைப்படும் தலைப்புகள்). உதாரணமாக: "PVC ஐ அப்புறப்படுத்துவது: மாற்று கலவைகள்."

விவாதத்தை ஏற்பாடு செய்யும் போது, கல்வித் துறையின் துணைத் தலைவர்உறுப்பினர்களுக்கு (மின்னணு வாயிலாக அல்லது சந்திப்பின்போது) தலைப்பை மட்டும் முன்வைக்க வேண்டும், பிறகு உறுப்பினர்கள் தாங்கள் வாதம் செய்ய விரும்பும் பக்கத்தை தேர்வு செய்ய காத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முதல் அமைப்பு அணிகள் இயற்கையாகவே தங்களை "அமைத்துக் கொண்டு வெளிவர" அனுமதிக்கிறது, மேலும் இது பக்கச்சார்பான முறையில் அல்லது ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வதைத் தவிர்க்கிறது.

மக்கள் நம்பாத அரை மனதாக உள்ள தரப்பின் சார்பாக வாதம் செய்வதை விட, தங்கள் தரப்பை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளிடம் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

அணிகளின் இறுதி அமைப்பைத் தீர்மானிப்பது கல்வித் துறையின் துணைத் தலைவருடைய பங்காகும்.

 

நேரம்/இடம் சார்ந்த விவாதங்கள்

நேரம்/இடம் சார்ந்த விவாதங்கள் (APDA படி) என்பது ஒரு குறிப்பிட்ட வகை விவாதம் ஆகும், இதில் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட நபரின் (பொதுவாக ஒரு அரசியல் தலைவர்) அல்லது ஒரு அமைப்பின் (அரசு, இயக்குநர்கள் குழு) பாத்திரத்தை வகிக்குமாறு அணிகள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உதாரணமாக: "கியூபா ஏவுகணை நெருக்கடியின்போது இருந்த ஜான். எஃப். கென்னடி தான் நீங்கள். கியூபாவில் URSS ஆனது ICBM-களை நிறுவுவதைக் காட்டும் சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்".

விவாதங்கள் இடத்தைக் குறிப்பிடலாம் அல்லது குறிப்பிடாமல் இருக்கலாம். மேற்கூறிய வழக்கில், அது பொருத்தமானது அல்ல - கென்னடி தனது நடவடிக்கையை முடிவு செய்த இடம் அவரது முடிவை பாதிக்கவில்லை. இருப்பினும், விவாத தலைப்பு "நீங்கள் ஜெனரல் கார்டன் மீடே; நீங்கள் கெட்டிஸ்பர்க்கில் ராபர்ட் லீயை தோற்கடித்தீர்கள்" என்பதாக இருந்தால், அந்த இடம் (ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த ஒரு போர்க்களம்) கூட்டமைப்பு இராணுவத்தைத் தொடர வேண்டாம் என்ற அவரது முடிவை நிச்சயமாக பாதித்திருக்கலாம்.

ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்குடன் நேரம்/இடம் சார்ந்த விவாதங்கள் சாதாரண விவாதங்களாகத் தொடர்கின்றன: இவை ஒரு வரலாற்று சூழ்நிலையை உருவகப்படுத்தும் விவாதங்கள் என்பதால், ஒரு குறிப்பிட்ட நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அந்த நேரத்தில் இருந்த நபருக்கு அல்லது அமைப்புக்கு கிடைக்காத தகவல்களைப் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் ஒரு அணி ஜப்பானிய பேரரசரைப் பிரதிநிதித்துவப்படுத்தினால், அவர்கள் அணு ஆயுதங்கள் இருப்பதைப் பற்றிய விஷயத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த விதி பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அந்த நபர் அறியாத தகவலின் பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்க, ஆனால் அந்தக் காலத்தில்/நேரத்தில் அந்தத் தகவல் அல்லது விஷயம் இருந்து, அது யாருக்கும் அவ்வளவாக தெரியாததாக இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். அதே உதாரணத்தைத் தொடர்ந்து, விவாதத்தில் டிசம்பர் 1, 1941 அன்று நடக்கும் பேர்ல் ஹார்பர் தாக்குதல் திட்டங்களைப் பற்றி ஜப்பானிய பேரரசர் அறிந்திருந்திருப்பார் என்று கருதுவது சரியானது, தாக்குதல் டிசம்பர் 7 அன்று நடந்திருந்தாலும் கூட.

வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேற்கண்ட எடுத்துக்காட்டுடன் மீண்டும் ஒருமுறை தொடரலாம், அமெரிக்க அரசாங்கம் தாக்குதல் குறித்த தெளிவான முன்னறிவிப்பைச் செய்திருந்ததா இல்லையா என்பதை வரலாற்றாசிரியர்கள் ஏற்கவில்லை, எனவே ஒரு அணி அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால், டிசம்பர் 1, 1941 அன்று நடந்த பேர்ல் துறைமுக தாக்குதலை அந்த அணி தன்னுடைய விவாதத்தில் பயன்படுத்த முடியாது

உருவாக்கப்படுத்திக் காட்டும் அந்தத் தலைவரின் உளவியல் ஆளுமையை மதித்து விவாதம் செய்ய வேண்டும் என்ற விதியை APDA பரிந்துரைத்தாலும், Agora கவனம் செலுத்தும் வாத/கல்விப் பக்கத்தை காட்டிலும், இது நாடகத்தில், பாத்திரம் வகிக்கும் மற்றும் ஆராய்ச்சி பகுதிக்கு விவாதத்தை மேலும் இட்டுச் செல்லும் என்று நாங்கள் கருதுகிறோம். Agora விவாதத்திற்கு, ஜூன் 20, 1941 இல் (ஆபரேஷன் பார்பரோசா தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு - ஜெர்மனி சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட படையெடுப்பு) நாஜி அரசாங்கத்தை ஒரு அணி பிரதிநிதித்துவப்படுத்தி, மேலும் தொடராமல் இருப்பது நல்லது என்று வாதிட்டு மற்ற அணிகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்று, "வெற்றி" பெறுவது முற்றிலும் செல்லுபடியானதே. இருப்பினும், ஹிட்லரின் ஆளுமை காரணமாக இதுபோன்ற நிகழ்வுகளின் விளைவு வரலாற்று ரீதியாக ஒருபோதும் நடந்திருக்காது.

தனிப்பட்ட வாதங்கள் இல்லாமல் நாகரீக விவாதத்தின் திடமான பாரம்பரியம் இல்லாவிட்டால், நேரம்/இடம் சார்ந்த விவாதங்களுக்கு, தலைப்புகள் மிகச் சமீபத்திய அல்லது மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்படக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

 

பாத்திரங்கள், அணிகள் மற்றும் அமைப்பு

 

குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கிளப்பின் VPE மூலம் விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிடப்படுகின்றன. ஒவ்வொரு விவாதத்திற்கும் பின்வரும் பாத்திரங்கள் நிரப்பப்பட வேண்டும்:

  • விவாத மதிப்பீட்டாளர்.
  • விவாத நீதிபதிகள், ஒரு போட்டி வடிவத்தில்.
  • விவாதத்திற்கான நேரம் கண்காணிப்பாளர் (சந்திப்பின் வழக்கமான நேரம் கண்காணிப்பாளரைப் போலவே இருக்கலாம்).
  • குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள். நடைமுறை நோக்கங்களுக்காக, ஐந்து அணிகளுக்கு மேல் இல்லாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • சாத்தியமானால், ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு பேக்அப் உறுப்பினர் இருக்க வேண்டும், அந்த நிகழ்ச்சிக்கு யாரும் வராமல் இருந்தால், அதனை அவர் நிரப்ப வேண்டும்.
  • அனைத்து அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான அணி உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்தப் பிரிவின் போது உபரிச் சொல் கண்காணிப்பாளர் மற்றும் அன்றைய நாளின் வார்த்தை ஆகியவை பயன்படுத்தப்படாது.
  • அனைத்து சொற்பொழிவுகளிலும் மொழியை சரியாக பேசுவதே ஒரு குறிக்கோளாக இருப்பதால், இந்தப் பிரிவின் போது இலக்கணவாதி பாத்திரம் இடம்பெறுகிறது.
  • இந்தக் கிளப்பில் உடல் பாவனை அல்லது கவன மதிப்பீட்டாளர் இருந்தால், இந்தப் பிரிவின் போது அந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
  • சந்திப்பு மதிப்பீட்டாளர் விவாத மதிப்பீட்டாளரை மதிப்பீடு செய்ய வேண்டும்.
  • சந்திப்பின் தலைவர் விவாத நடுநிலையாளர் மற்றும் மீதமுள்ள பாத்திரங்களை வழக்கம் போல் அறிமுகப்படுத்துவார்.

 

தேவைப்படும் மெட்டீரியல்கள்

 

விவாதத்திற்குத் தேவையான மெட்டீரியல்களின் பட்டியல் பின்வருமாறு:

  • ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வாக்கெடுப்பு "வாக்குச்சீட்டு".
  • கேள்வி பதில் பிரிவுக்கு அணிகளின் பெயர்கள் அல்லது எண்கள் (ஒவ்வொரு பார்வையாளர் உறுப்பினருக்கும்) கொண்ட அட்டைகளின் தொகுப்பு. பரிந்துரைக்கப்பட்டபடி அணிகள் ஒற்றை இலக்க அல்லது ஒற்றை எழுத்து பெயர்களுடன் பெயரிடப்பட்டிருந்தால், இந்த அட்டைகளை ஒருமுறை அச்சிட்டு, அனைத்து விவாதங்களுக்கும் மீண்டும் பயன்படுத்தலாம்.

விவாத நடுநிலையாளர்

 

விவாத நடுநிலையாளரின் பாத்திரமானது:

  • விவாதத்தின் தலைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்
  • நுழைவு மற்றும் வெளியேறும் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
  • அணிகளையும் ஒவ்வொரு அணியும் வாதம் செய்யும் நிலையையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
  • அணிகளுக்கு மேடைகளைத் தந்து, அவர்களிடமிருந்து அதைப் பெறுதல் வேண்டும்.
  • விவாத விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • விவாதத்தின் போது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மரியாதையுடனும் கனிவுடனும் பேசச் செய்ய வேண்டும்.

 

ஒவ்வொருவரும் பேசும் அளவைக் கட்டுப்படுத்த விவாத மதிப்பீட்டாளருக்கு நேரம் கண்காணிப்பாளர் உதவுவார்.

போட்டிகளில், விவாத நடுநிலையாளர் விவாத நீதிபதிகளையும் சுருக்கமாக விளக்குவார்.

விவாத நீதிபதிகள்

விவாத நீதிபதிகள் பின்வருவனவற்றுக்கு பொறுப்பானவர் ஆவார்:

  • கேள்வி பதில் பிரிவின் போது அணிகளிடம் கேள்வி கேட்பர்
  • சந்திப்பின் முடிவில் கருத்துக்களை வழங்குவர்
  • அது ஒரு போட்டியாக இருந்தால், ஒவ்வொரு அணிக்கும் மதிப்பெண்களை வழங்குவர்

இவர்கள் பக்கச்சார்பற்றவர்களாகவும் (முடிந்தவரை) தகுதி வாய்ந்த நிபுணர்களாகவும் இருக்க வேண்டும். விவாத நீதிபதிகள் Agora Speakers உறுப்பினர்களாக இருக்க தேவையில்லை, உண்மையில் சொல்லப்போனால், அவர்கள் உறுப்பினர்களாக இல்லாமல் இருப்பது நல்லது. நீதிபதிகளாக இருக்கக்கூடியவர்கள்:

  • பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் அல்லது அந்தத் துறையின் ஊழியர்கள்.
  • பத்திரிகையாளர்கள்.
  • Agora அல்லது பிற பொது சொற்பொழிவாற்றும் அமைப்புகளில் பிற கிளப்புகளில் இருக்கும் உறுப்பினர்கள்.
  • உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சி உறுப்பினர்கள்/தலைவர்கள்
  • வணிக உரிமையாளர்கள்.
  • மருத்துவர்கள்
  • வழக்கறிஞர்கள்

கடைசி இரண்டில் பரிந்துரைக்கப்படுபவர்கள் குறிப்பாக சமூக அல்லது நெறிமுறை பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விவாதங்களுக்கு சுட்டிக்காட்டப்படுகிறது.


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Thursday October 7, 2021 11:36:44 CEST by shahul.hamid.nachiyar.